தனியார் பால் நிறுவன மேலாளர் தற்கொலை - காவல் துறை விளக்கம்

x

சென்னை ரெட்டேரியில் உள்ள தனியார் பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரத்தில் காவல் துறையின் தலையீடு எதுவும் இல்லை என்று சென்னை காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. பால் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நவீன் 40 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிறுவனத்தின் அதிகாரிகள், கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை காவல் துறை, இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப் பிரிவில் நவீனை அழைத்து போலீசார் விசாரணை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. பால் நிறுவனத்திற்கு நவீன் அனுப்பிய

மின்னஞ்சலில் காவல் துறையினரை பற்றி எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை என்றும், ஆனால், சமூக வலைதளங்களில் சிலர் கொளத்தூர் காவல் துணை ஆணையாளரை தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்