தந்தை கண்முன்னே மகன் மரணம் -யாருக்கும் வர கூடாத நிலை

x

சென்னை பூந்தமல்லியில் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து, குமணன்சாவடி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற 5 வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நாகேந்திரன் மற்றும் அவரது மகன் ரோகித், இருவரும் கீழே விழுந்ததில் ரோகித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்