

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே தனியார் பேருந்து ஒன்று, சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஒடுகத்தூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அணைக்கட்டு சாலையில் பேருந்து சென்றுள்ளது. அப்போது எதிர்பார விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பேருந்து மோதியது. இதில் பயணித்த 16 பேருக்கு படுகாயங்களும், 5 நபர்களுக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.