Erode | Road Accident | பள்ளி வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - ஓட்டுநர் தப்பியோட்டம்

பள்ளி வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - ஓட்டுநர் தப்பியோட்டம்

Erode | Road Accident | பள்ளி வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - ஓட்டுநர் தப்பியோட்டம் #Erode #RoadAccident #TNPolice ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில், சாலையோரம் குழந்தைகளை இறக்கிவிட நின்றிருந்த பள்ளி வேன் மீது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. வேனில் இருந்த 6 குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பினர். காயமடைந்த குழந்தைகளை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோரும் பொதுமக்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X