திடீரென பற்றி எரிந்த தனியார் வங்கி - சென்னையில் அதிர்ச்சி
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் நள்ளிரவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது.மேலும் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
