பரோலில் வந்த கைதி - மனைவியை கொன்று தானும் தற்கொலை?
தர்மபுரி அருகே பரோலில் வெளிவந்த ஆயுள் கைதி, மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மதிகோண்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். பரோலில் வீட்டிற்கு வந்த அவர், மனைவி மகாலட்சுமியை அழைத்து கொண்டு குண்டலப்பட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுள்ளார். கதவு உள் தாழிட்டவாறு ரமேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையிலும், மகாலட்சுமி வெட்டு காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டனர். ரமேஷ்குமார், அவரது மனைவியை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
