வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
Published on
வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ், கடந்த 2014 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில், 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இன்று காலை தோட்ட பணிக்காக கைதிகளை அழைத்து வந்த சிறை காவலர்கள், மதிய இடைவேளையின்போது கணக்கெடுத்தபோது, ஒருவர் குறைவது தெரிய வந்துள்ளது. சோதனையிட்டதில், தப்பி ஓடிய கைதி, ரமேஷ் தான் என்பது தெரிய வந்த‌து. இதையடுத்து தப்பி ஓடிய ரமேஷை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com