தர்மபுரி மருத்துவமனையில் இருந்த கைதி தப்பி ஓட்டம்..

தர்மபுரியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் தப்பி ஓடினான்.
தர்மபுரி மருத்துவமனையில் இருந்த கைதி தப்பி ஓட்டம்..
Published on
தர்மபுரியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் தப்பி ஓடினான்.தர்மபுரி நகர் குமாரசாமிபேட்டையை சேர்ந்த வினோத் என்ற இளைஞரை வழிப்பறி வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது இளைஞருக்கு கை, காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி வினோத் விடியற்காலை பொழுதில் தப்பி ஓடினான். இதனையடுத்து கைதி வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com