தமிழக மீனவர் படகுகளை மீட்க பிரதமர் நடவடிக்கை"
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகுகளை இலங்கை கடற்படை கடலில் மூழ்கடிக்கப் போவதாக வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாமென தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தூக்கு தண்டனைக்கு சென்ற மீனவர்களை கூட மீட்டுக் கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்றும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
Next Story
