மாலை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அரியலூரில் நடந்த திடீர் மாற்றம்
கங்கைகொண்ட சோழபுரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் திரையிறங்க உள்ள இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் ஹெலிபேட் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.இதற்காக திருச்சியில் இருந்து பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்குவதற்கான ஒத்திகை நடைபெற்றது. இதில் இறங்கும் இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் இருந்ததால் ஹெலிகாப்டர் இறங்குவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து இரவோடு இரவாக ஹெலிபேட் பொன்னேரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Next Story
