ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி... டுடே பிளான் என்ன..? | Rameswaram | PM Modi

ராமேஸ்வரம் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று தனுஷ்கோடி அருகேவுள்ள அரிச்சல் முனை செல்லவுள்ளார்.

ராமகிருஷ்ணா மடத்திலிருந்து சாலை மார்க்கமாக 9.30 மணி அளவில் தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல் முனை பகுதிக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். ஒன்பது முப்பது மணி முதல் 10 மணி வரை அரிச்சல் முனையில் பூஜைகள் மற்றும் தரிசனம் மேற்கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பி, 10.25 மணிக்கு தனுஷ்கோடி-ராமேஸ்வரம் சாலையில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் தரிசனம் செய்யவுள்ளார். தரிசனத்தை முடித்தபிறகு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com