சிசிடிவி பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு-போலீஸ் பாதுகாப்புடன் பொருத்தம்

சிசிடிவி பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு-போலீஸ் பாதுகாப்புடன் பொருத்தம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த, அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை பொருத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த, எதிர்ப்பு தெரிவித்து அர்ச்சகர்கள் கடந்த ஜூன் 19-ம் தேதி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கருவறைக்குள் உள்ள மரகத லிங்கத்தை பாதுகாக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்திவிட்டு, ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com