சிதம்பரம் : சாமி கும்பிட வந்த பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் செவிலியரை தீட்சிதர் தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அவர் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். கோயில் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு லதா அங்கிருந்த தீட்சிதரிடம் கூறியுள்ளார். அப்போது தீட்சிதர் வெறும் தேங்காயை மட்டும் உடைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஏன் அர்ச்சனை செய்யவில்லை என கேட்டபோது லதாவை தகாத வார்த்தைகளால் திட்டிய தீட்சிதர் கன்னத்தில் அறைந்ததால் கோயில் வளாகத்தில் மயங்கி விழுந்தார். அப்போது சக பக்தர்கள் தீட்சிதரை தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com