மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
கொரோனா தடுப்புக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
கொரோனா தடுப்புக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, கிருமிநாசினி 200 மி.லி. 110 ரூபாய்க்கும்,N95 முக கவசம் 22 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிஇ கிட் - 273 ரூபாய்க்கும்,பல்ஸ் ஆக்சிமீட்டர் - 1500 ரூபாய்க்கும் மேல் விற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.இதேபோல் பல்வேறு வகையான கையுறை மற்றும் முக கவசங்கள் என மொத்தம் 15 பொருட்களுக்கு, அதிகபட்சமாக விற்கப்பட வேண்டிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
