Fish Rate| தாறுமாறாக சரியும் விலை.. மீன் பிரியர்களே இதான் டைம்
தாறுமாறாக சரியும் விலை.. மீன் பிரியர்களே இதான் டைம்
#fishrate #fishprice #fishmarket
புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் நாட்டுப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களின் விலை சற்று குறைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பலர் அசைவ உணவை தவிர்ப்பதால், மீன்களின் விலை குறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். விலை மீன் கிலோ 450 முதல் 550 ரூபாய்க்கும், சீலா மீன் 1,000 முதல் 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பாறை மீன் 350 முதல் 400 ரூபாய்க்கும், ஊளி மீன் 350 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக விசைப்படகுகள் மற்றும் சிறிய நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாததால், மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
