தி.நகரில் குக்கர் வெடித்து இருவருக்கு நேர்ந்த கதி
சென்னை தி நகர் சவுத் உஸ்மான் சாலையில் தோகா ஸ்நாக்ஸ் என்ற பெயரில் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரக்கூடிய நிலையில், நேற்று பக்ரீத் என்பதால் கடை விடுமுறை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு கடையில் தங்கி பணியாற்றி வரக்கூடிய ஊழியர்களுக்கு முபாரக் மற்றும் அப்சல் ஆகியோர் குக்கரில் இறைச்சியை சமைத்து கொண்டிருந்துள்ளனர்.
பின்னர் குக்கரை முபாரக் திறக்கும்போது திடீரென குக்கர் வெடித்து சிதறியதில் ஊழியர்களான அப்சல் மற்றும் முபாரக்கிற்கு முகம் மற்றும் தலையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இருவரும் அருகில் இருந்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
