குக்கர் வெடித்து பெண் கோர மரணம் - சென்னையில் அதிர்ச்சி
குக்கர் வெடித்து படுகாயம் அடைந்த பெண் பலி
சென்னை திருவொற்றியூரில் குக்கர் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் சரவணன் நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி ராஜலட்சுமி. இவர் வீட்டில் சமையல் செய்த போது, சாதம் வைத்திருந்த குக்கர் திடீரென வெடித்தது. இதில் முகத்தில் படுகாயம் அடைந்த ராஜலட்சுமி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றிய சாத்தாங்காடு போலீசார், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
Next Story
