குக்கர் வெடித்து இருவருக்கு முகம், தலையில் தீக்காயம்

சென்னை தி.நகரில் உள்ள கடை ஒன்றில் உணவு சமைத்து கொண்டிருந்த போது குக்கர் வெடித்ததால், இரண்டு பேர் காயமடைந்தனர். பக்ரீத் காரணமாக கடை மூடப்பட்ட நிலையில், ஊழியர்கள் முபாரக் மற்றும் அப்சல் இருவரும் கடையிலேயே தங்கியிருந்தனர். அப்போது அவர்கள்

குக்கரில் இறைச்சி சமைத்து கொண்டிருந்த நிலையில், முபாரக் குக்கரை திறந்தபோது திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் இருவருக்கும் முகம் மற்றும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com