9 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
9 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு
Published on

சென்னை உயர் நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று 9 பேரையும் நிரந்தர நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டு, அவர் பதவியேற்றுள்ளார். தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் 21 இடங்கள் காலியாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com