கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் மரணம் - உடலை வாங்க பெற்றோர் மறுப்பு

திருச்செங்கோடு அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் மரணம் - உடலை வாங்க பெற்றோர் மறுப்பு
Published on
சேலம் மாவட்டம் காகாபாளையத்தை சேர்ந்த சங்கீதாவுக்கும் திருச்செங்கோட்டை அடுத்த பலநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்தி என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணமானது. இதில் சுப்ரமணி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். திருமணமானதில் இருந்தே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே 11 மாதத்தில் பெண் குழந்தை இவர்களுக்கு உள்ள நிலையில் சங்கீதா மீண்டும் கருவுற்றார். ஆனால் கருவை கலைக்குமாறு சக்தி தொடர்ந்து கூறி வந்த நிலையில் அதனால் ஏற்பட்ட பிரச்சினையில் சங்கீதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்த பெண்ணின் பெற்றோர், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com