ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கோர்ட் அதிரடி தீர்ப்பு
கடந்த பிப்ரவரி மாதம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, கீழே தள்ளிவிட்ட வழக்கில் கைதான ஹேமராஜ் என்பவர் குற்றவாளி என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஹேமராஜ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் செய்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் முதல் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹேமராஜுக்கான தண்டனை விபரங்கள் வரும் 14ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
Next Story
