கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை- கணவர் விஷம் அருந்தி தற்கொலை
வந்தவாசி அருகே கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த விழுதுபட்டு கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா.
இவருக்கும் தழுதாழை கிராமத்தை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும் திருமணமாகி, திவ்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் திவ்யா அவருடைய அம்மா வீட்டில் வசித்து வந்த நிலையில் வயிற்று வலி காரணமாக திவ்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த கணவர் பிரதாப் சோகம் தாங்காமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்..
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
