கர்ப்பிணி மகள் திடீர் மரணம்... இறப்பை கேட்டு அதிர்ச்சியில் தந்தை மரணம்...கதறி துடிக்கும் குடும்பம்..

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கர்ப்பிணி மகள் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தையும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளியந்துறையை சேர்ந்தவர் வில்லு. இவரது மகள் அருள்ஜோதி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்த அருள்ஜோதி, திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையறிந்த தந்தை வில்லுவம் அதிர்ச்சியில் மயங்கிவிழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்