உசிலம்பட்டி அருகே குழந்தை பிறந்த இரண்டே வாரத்தில் பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கின் மனைவி தீபாவுக்கு, 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அறுசை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல், நேற்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென தீபாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி தீபா உயிரிழந்தார். தவறான சிகிச்சை காரணமாக பெண் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.