"தலித்களுக்கு திராவிட இயக்கம் நிறைய செய்துள்ளது" - திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்

சிஏஏ விவகாரத்தில் தமிழகத்திலும் வன்முறையை உருவாக்கி விடுவார்களோ என்ற பதற்றம் தமக்கு இருப்பதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
"தலித்களுக்கு திராவிட இயக்கம் நிறைய செய்துள்ளது" - திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்
Published on

சிஏஏ விவகாரத்தில் தமிழகத்திலும் வன்முறையை உருவாக்கி விடுவார்களோ என்ற பதற்றம் தமக்கு இருப்பதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குஜராத்தில் நடந்தது போன்ற வன்முறையை டெல்லியில் நிகழ்த்தும் முயற்சியில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

தலித்களுக்கு திராவிட இயக்கம் நிறைய செய்துள்ளதாக கூறிய பா.ரஞ்சித், அதனை பிச்சை என்று சொல்ல முடியாது என்றார். அயோத்திதாசர் , ரெட்டைமலை சீனிவாசன் போன்ற தலித் தலைவர்கள் திராவிட இயக்கங்களுக்கு முன்பாகவே பல சமூக நீதிச் செயல்பாடுகளில் பங்காற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com