ஆவணி மாத சனி பிரதோஷம் - நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள், தேன், பால், தயிர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆலயத்திலும், சனி பிரதோஷ சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com