வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சலுகை : "பதிவஞ்சல் மூலமாக புதுப்பிக்கலாம்" - தமிழக அரசு தகவல்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாதவர்கள், பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சலுகை : "பதிவஞ்சல் மூலமாக புதுப்பிக்கலாம்" - தமிழக அரசு தகவல்
Published on

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சலுகை : "பதிவஞ்சல் மூலமாக புதுப்பிக்கலாம்" - தமிழக அரசு தகவல்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாதவர்கள், பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறியவர்கள்,பணிவாய்ப்பினை பெறும் வகையில்,மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி அரசு அரசாணை பிறப்பத்தது.2017, 18 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் புதுப்பிக்கதவறியவர்கள், இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.குறிப்பாக 27.08.2021 -க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாதவர்கள், பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும்புதுப்பித்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com