Chengalpattu | இவர்கள்தான் குறி.. நடுங்க வைக்கும் பகீர் சம்பவம் - சென்னை அருகே அதிர்ச்சி
செங்கல்ப்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஜோசியம் பார்ப்பது போல நடித்து மூதாட்டியிடம் இருந்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தூர் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வள்ளியம்மாளிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல் வந்த பெண்மணி வீட்டில் பல சிக்கல்கள் கூறி சாமியார் ஓருவரை அனுப்பி வைப்பதாக கூறி சென்றுள்ளார். அதன்படியே மறுநாள் மூதாட்டி வீட்டுக்கு வந்த சாமியார், நகை மற்றும் பணத்தை வைத்து அருகே உள்ள கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என கூறி அனைத்தையும் வாங்கி கொண்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சாமியார் வராத நிலையில் இது குறித்து மூதாட்டி செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Next Story
