உணவு டெலிவரி ஊழியர்​ போல் வலம் வந்து பைக்குகள் திருட்டு

x

சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்​போல வலம் வந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவரின் பைக் திருடுபோன வழக்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த கபிலன் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜுன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உணவு டெலிவரி ஊழியரான கபிலன் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு, அர்ஜுன் உதவியுடன்திருடி விற்று வந்துள்ளார். திருடப்படும் வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவி மூலம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக வாகனங்களை திருடி பூங்காக்களில் நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து, கல்லூரி மாணவர்களை குறி வைத்து முகநூல் பக்கங்களில் விளம்பரம் செய்து, திருட்டு வாகனங்களை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்