நகை வாங்குவது போல் நடித்து நகை திருட்டு | சிசிடிவியில் சிக்கியவட மாநில இளைஞர்
ஈரோடு அருகே நகை வாங்குவது போல் நடித்து 5 பவுன் நகையை இளைஞர் ஒருவர் திருடியுள்ளார். ஈரோடு மாவட்டம் தாளவாடி நகர்ப் பகுதியில் உள்ள ஜெகதீஷ் என்பவரின் நகைக்கடைக்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவர், நகை வாங்குவது போல் பாசாங்கு செய்து, ஐந்து பவுன் தங்க செயினை திருடியுள்ளார். பின்னர் நகை பிடிக்கவில்லை என கூறி வெளியே சென்றுள்ளார். சிசிடிவி பதிவில் அவர் தங்க செயினை தனது பாக்கெட்டில் போட்டு திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. புகாரின் பேரில் தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
