

சென்னையில் குழந்தைகள் ஆபாச படம் அனுப்பியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்தவர் சுமித் குமார் கல்ரா. இவர் குழந்தைகள்ஆபாச பட இணைப்பை மற்றொருவருக்கு அனுப்பியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவரை, விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவரை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.