9 வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை...6 மாத கொடூரம்..! || Thiruppathur POCSO case
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, 6 மாத காலமாக 9-ம் வகுப்பு மாணவியை ஆபாச புகைப்படம் அனுப்ப சொல்லி மிரட்டி, அதனை நண்பர்களுக்கு பகிர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். ஆலங்காயம், பூங்குளம் ரங்கன் வட்டம் பகுதியை சேர்ந்த கலையரசன்,
தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவியுடன் கடந்த 6 மாத காலமாக செல்போன் மூலம் பேசி பழகி வந்துள்ளார். மேலும், மாணவியை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வீடு புகுந்து வெட்டி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி, ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை கலையரசனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை கலையரசன் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில்,
கலையரசன், அவரது நண்பர்கள் ரஞ்சித், சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் உட்பட 5 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
