

''சிறார் ஆபாசப் படங்களை பார்ப்பவர்கள் பட்டியலில், சென்னை நகரம் முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக, அவ்வாறான படங்களை பதிவேற்றுபவர்கள் பட்டியலில் திருச்சியை சேர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகம் என தெரியவந்துள்ளது. சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றும் கும்பல் தனித்தனி குழுவாக, 3 ஐ.பி. முகவரிகள் கொண்டு இயங்குவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படி, ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றுபவர்கள் பட்டியலில், சுமார் 60 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த ஐ.பி. முகவரிகளை வைத்து சைபர் க்ரைம் போலீசார், தற்போது விசாரணையை துவக்கி உள்ளனர். இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் கண்டுபிடிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, "ஆபாச படங்களை இணையத் தளத்தில் பார்த்தவர்கள் மற்றும் பதிவேற்றியவர்கள் பட்டியல் கிடைத்தவுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று, திருச்சி மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.