கனமழை எதிரொலி : பூண்டி, புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
கனமழை எதிரொலி : பூண்டி, புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த இரு ஏரிகளுக்கு மட்டும் 815 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழையால், 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு தெள்ளாயிரத்து 38 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது, ஆயிரத்து 604 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com