

பொன்னேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திராவை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.