காட்டுக்குள் இறந்து கிடந்த இளைஞர் - தலையில் இருந்த தடயம்.. அதிர்ந்து போன ஊர் மக்கள்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சின்னம்பேடு பேட்டை கிராமத்தில் சங்கர் என்ற இளைஞர், தாய், தந்தையுடன் வசித்து வந்த நிலையில், இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கரைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து போலீசார், மோப்ப நாய், தடய வல்லுநர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். சங்கருக்கு யாருடனும் முன்விரோதம் இல்லை என்று கூறப்படும் நிலையில் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
