தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை அடுத்துள்ள மாதவன் குடிகாடு பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற இளம்பெண், சிங்கபூரில் இருந்தபடி, ஜாதி ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இது பொன்னமராவதி பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து கனிமொழி மீது பாப்பாநாடு காவல் நிலையத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த கனிமொழியை போலீசார் கைது செய்தனர். அவதூறு ஆடியோ விவகாரத்தில், வெளிநாடுவாழ் தமிழர்கள் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.