பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேட்ட கேள்வி
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய, நீதிமன்றத்தில் சிபிஐ முன் அனுமதி பெற்றதா என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், யார் மீது வேண்டுமானாலும் விவரங்களின்றி சிபிஐ வழக்கு பதிய முடியுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு குற்றச்சாட்டுக்கான விவரங்கள் ஆவணங்களில் உள்ளதாக சிபிஐ தரப்பு கூறியதுடன், பதிலளிக்க அவகாசம் கோரியது. அதனை ஏற்ற நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
Next Story