சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்றால் பொன்மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்றால் பொன்மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்றால் பொன்மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
Published on
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேலின் பதவி காலம் நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதுவும் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் என பொன்மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் கடிதம் எழுதியுள்ளார். இன்று மாலைக்குள் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்றால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com