Pongal Special Train Booking | பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு..
பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது
பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு வழித்தடங்களில் 10 சிறப்பு ரயில்கள் 34 முறை இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்திருந்தது. வழக்கமாக ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்த நிலையில், சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில், நெல்லை, கோவை, ராமேஸ்வரம், ஈரோடு, மங்களுரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 8ம் தேதி முதல் 21ம் தேதி வரை இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது இந்த ரயில்களுக்கான சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.
Next Story
