"வருகிற 10ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்" - பொங்கல் பரிசு வினியோகிக்க அரசு நடவடிக்கை

வருகிற 10ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
"வருகிற 10ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்" - பொங்கல் பரிசு வினியோகிக்க அரசு நடவடிக்கை
Published on

வருகிற 10ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் அனைவருக்கும் பரிசுகள் வினியோகிக்க வசதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com