

* வரும் 7 ஆம் தேதி முதல், பொங்கல் பண்டிகைக்கு முன்னால் அனைவருக்கும் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மற்றும் ஆயிரம் ரூபாய் நிதி, கவர்களில் வைத்து கொடுக்காமல், வெளிப்படையாக கொடுக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, அதனை கண்காணிக்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
* சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில், கூடுதல் பணியாளர்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எளிய முறையில் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்பதை விளக்கும் வகையில், உள்ளூர் நாளிதழ், தொலைக்காட்சிகளில் மாவட்ட ஆட்சியர்கள் விளம்பரப்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
* ரேஷன் கடைக்கு வந்த குடும்ப அட்டைதாரர்கள் யாரும் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாமல் செல்ல கூடாது என குறிப்பிட்டுள்ளது.