நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் : 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் : 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
Published on

தை முதல் நாளான நாளை தமிழர்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றனர். கிராமங்களில் பொங்கல் விழா களைகட்டும் என்பதால், பணி காரணமாக நகரங்களில் வசிப்பவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 8 லட்சம் பேர் அரசு பேருந்துகள் மூலமாக சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, 10 கோடியே 80 லட்ச ரூபாய் வசூலாகி உள்ளதாகவும் கூறியுள்ளது. மாலையில் அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் ஏராளமானோர் சென்றதால் சென்னையில் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்தததால், ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com