ADMK | Sriperumbudur | ஸ்ரீபெரும்புதூர் நகர அதிமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக நகர செயலாளர் போந்தூர் மோகன் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம், அதிமுக கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் பிரசிதாகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் இணைந்து மண் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
Next Story
