சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். உரியடி போட்டியில் யாரும் வெற்றி பெறாததால் அதில், கலந்து கொண்டு உளவுத்துறை காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு முதல் பரிசை வென்றார். அவருக்கும் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பரிசு வழங்கி பாராட்டினார்.