Pongal Celebration | பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு..
"பொங்கல் முடிந்து திரும்புபவர்களுக்காக 25 ஆயிரம் பேருந்துகள்"
பொங்கல் முடிந்து திரும்பும் பொதுமக்களுக்காக 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு சிலர் தங்கள் ஊருக்கு பேருந்து வரவில்லை என்று கூறவே, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பொங்கல் முடிந்து திரும்பும் பொதுமக்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பட்டியலிட்டார்.
Next Story
