அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு
Published on

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என்றும், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களு​க்கு, பொங்கல் போனசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களாக இருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com