கொரோனாவில் இருந்து குணமடைந்த காவலர் - மீண்டும் பணிக்கு திரும்பினார் - உற்சாக வரவேற்பு

பொன்னேரி அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, மீண்டும் பணிக்கு திரும்பிய காவலருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனாவில் இருந்து குணமடைந்த காவலர் - மீண்டும் பணிக்கு திரும்பினார் - உற்சாக வரவேற்பு
Published on
பொன்னேரி அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, மீண்டும் பணிக்கு திரும்பிய காவலருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொன்னேரி அடுத்த ஆரணி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவருக்கு கடந்த 8ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் பூரண குணமடைந்து 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதனையடுத்து இன்று அவர் மீண்டும் பணியில் இணைந்தார். அவருக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பூங்கொடுத்து கொடுத்து, சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com