Pollachi | ஆழியார் அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்ற முப்பெரும் விழா

ஆழியார் அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்ற முப்பெரும் விழா

Pollachi | ஆழியார் அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்ற முப்பெரும் விழா

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அறிவுத் திருக்கோயிலில், தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் 116-வது ஜெயந்தி விழா, உலக அமைதி தின விழா மற்றும் பத்மபூஷண் விருதாளர் டாக்டர் எஸ்.கே.எம். மயிலானந்தன் அவர்களுக்கான பாராட்டு விழா என முப்பெரும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மகரிஷியின் மகா சமாதிக்குப் பிறகு, உலக சமுதாய சேவா சங்கத்தின் பணிகளை அர்ப்பணிப்புடன் வழிநடத்தி வரும் அதன் தலைவர் டாக்டர் எஸ்.கே.எம். மயிலானந்தன் அவர்களுக்கு மத்திய அரசு 'பத்மபூஷண்' விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதனை ஒட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில், பாரதீய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்புரையாற்றினார். மேலும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் அறங்காவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com