பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை : திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, சிபிசிஐடி காவல் முடிந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை : திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு
Published on
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை சிபிசிஐடி போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை அவரை காவலில் எடுத்த போலீஸார், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று காலை நீதிபதி நாகராஜ் முன்பு அவரை ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர். இன்று மாலை வரை அவகாசம் உள்ள நிலையில் முன்கூட்டியே அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர். அடுத்தகட்டமாக, சிறையில் உள்ள சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் வீட்டில் சேகரிக்கப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகளில் உள்ள பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com